கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்கரும்பூர், இறையூர், கூடலூர், மதுரவள்ளி, திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர், திட்டக்குடி. மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இளமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பல்வேறு முன்னோடி திட்டங்கள் ஏற்படுத்தப் பட்டு அவற்றின் பலன் கள் கடைக்கோடி கிராம பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டும் என்பதற் காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைக ளும் தங்குதடையின்றி விரைந்து மக்களுக்கு சென்றடைய உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட் டத்தை செயல்படுத்தி வருகிறார்.
நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண் கரும்பூர் அங்கன்வாடி மையம் மற்றும் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் அங்கன்வாடி மையங்களில் குழந்தை களின் எடை,உயரம் மற்றும் ஊட்டச்சத்து விகிதம் குறித்தும்,அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் குழந்தைகளின் வருகை பதிவேடு குறித்தும், வெண்கரும்பூர் ஊராட்சியில் வட்டார நாற்றங்கால் பண்ணையினையும், இறையூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் தையலகத்தையும், கூடலூர் ஊராட்சியில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள தானியகளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பார்வையிட்டு ஆய்வு செய்ததைதொ டர்ந்து திட்டக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண் கள் மேல்நிலைப்பள்ளிகள், தி.இளமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து நடை பெறும் சிறப்பு வகுப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும் திட்டக்குடி வட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் வருவாய் கிராமங்கள் வாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வரு வாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வி த்துறை,மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்ப டுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மூலம்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தீர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். மேலும் அரசு நலத்திட்டங்கள் தகுதி யான பயனாளிகள் விடு தலின்றி அனைவருக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.



