fbpx
Homeபிற செய்திகள்நந்தா பிரீமியர் லீக்- 2025 விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

நந்தா பிரீமியர் லீக்- 2025 விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

ஈரோடு நந்தா இந்திய மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளான ஆயுர்வேதா, சித்தா, இயற்கை மற்றும் யோகா பத்து நாட்கள் “நந்தா பிரீமியர் லீக் 2025” என்கிற விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன், பானுமதி சண்முகன், செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப் ஆகியோர் தடகள போட்டிகள், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள்.

மேலும், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி, சித்தா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் எம்.மேனகா, இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ரீவ்ஸ் ஜஸ்ட்லீன் தாஸ், நந்தா ஆயுர்வேத மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் எம்.கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
480 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துக் கொள்கிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img