இந்திய உயர் கல்வியில் ஒரு மைல்கல்லான தருணத்தில், அம்ருதா விஸ்வ வித்யாபீடம் டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் (THE) இம்பாக்ட் ரேங்கிங்க்ஸ் 2025-ல் உலகின் முதல் 50 நிறுவனங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தரவரிசை ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களின் முன்னேற் றத்தை மதிப்பிடுகிறது.
மொத்த உலக தரவரிசையில் 41-வது இடத்தைப் பிடித்துள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடம், இந்தியா வின் மிக உயர்ந்த SDG தாக்கம் கொண்ட பல்கலை க்கழகமாக உயர்ந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஸ்ரீ மாதா அம்ரு தானந்தமயி தேவியின் அன்பு, அறிவியல் மற்றும் சேவையின் அடிப்படையிலான கண்ணோட்டம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.
இது குறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் புரோவோஸ்ட் டாக்டர் மனீஷா ரமேஷ், கூறுகையில், “இந்த உலகளாவிய அங்கீகாரம், புதுமைக்கான எங்களின் உறுதிப்பாட்டின் சான்றாகும்,” என்றார்.
இந்த ஆண்டின் இம்பாக்ட் ரேங்கிங்க்ஸ் மிகுந்த போட்டியுடன் கூடியதாக இருந்தது.
இதில் 130 நாடுகளிலிருந்து சுமார் 2,540-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங் கேற்றன.
அவற்றில், இந்தியா 148 நிறுவனங்களுடன் மிகுந்த பிரதி நிதித்துவம் கொண்ட நாடாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.



