Homeபிற செய்திகள்அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பை தடுக்க தொடர்ந்து வாகன தணிக்கை: ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா தகவல்

அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பை தடுக்க தொடர்ந்து வாகன தணிக்கை: ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா தகவல்

நாமக்கல், -பரமத்தி சாலையில், கீரம்பூர் அருகில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா வருடாந்திர ஆண்டு தணிக்கை என்ற அடிப்படையில், குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரேஷன் அரிசி உள்ளிட்ட, அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பை தடுக்க தொடர்ச்சியாக வாகன தணிக்கை செய்யவும், ரேஷன் கடைகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும். கடத்தல் குறித்து தகவல் தெரிந்தால், ஒன்றிணைந்து தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.


தமிழகத்தில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தல் வெகுவாக குறைந்துள்ளது. அரிசி கடத்தல் வழக்கில் இதுவரை 56 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சரகம் வாரியாக குழுக்கள் பிரிக்கப்பட்டு, குடிமைப் பொருள் வழங்கல் சார்ந்த குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை, ரூ.1.06 கோடி மதிப்பிலான 878 டன் பொது விநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 5,120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,608 பேர் கைதாகி உள்ளனர். மேலும், 1,099 வாகனங்கள் பறிமுதல், அரிசி கடத்தல் குறைந்த நிலையிலும் வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கேரளம், கர்நாடக மாநில எல்லையோர மாவட்டங்களில் அதிகளவில் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெறுகிறது . நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை, கோழிப் பண்ணைகள் ஏராளமாக உள்ளன.

பண்ணைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மண்டல துணைக் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் கண்ணா காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img