fbpx
Homeபிற செய்திகள்விலை குறைவால் விறுவிறுப்பாக நடக்கும் மீன் வியாபாரம்

விலை குறைவால் விறுவிறுப்பாக நடக்கும் மீன் வியாபாரம்

தமிழ்நாட்டில் மீன்பிடிதடை காலம் நீங்கியதனால், சந்தைகளுக்கு மீன் வரத்து வழக்கத்தை விட அதிகரித்திருக்கிறது. இதனால், மீனின் விலை பாதிக்கும் பாதி குறைந்தது. இதனால் மீன் மார்க்கெட்டை அசைவ பிரியர்கள் முகாமிடுகின்றனர்.
கோவை உக்கடம் மார்கெட்டில் கடந்த வாரம் 1300க்கு விற்கப்பட்ட வஞ்சரம் இந்த வாரம் 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போன்று பாறை 600லிருந்து 320 ரூபாய்க்கும், மத்தி 400 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கும், நெத்திலி 420 ரூபாயிலிருந்து 250 ரூபாய்க்கும், செம்மீன் 650 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கும், வாவல் 900 ரூபாயிகிருந்து 620 ரூபாய்க்கும், அயிலை 450 ரூபாயிலிருந்து 250 ரூபாய்க்கும், கெலாத்தி லெதர் ஜாக்கெட் 550 ரூபாயிலிருந்து 320 ரூபாய்க்கும், சங்கரா 400 ரூபாயிலிருந்து 260 ரூபாய்க்கும், கொடுவா 850 ரூபாயிலிருந்து 550 ரூபாயாகாவும் குறைந்து விற்கப்படுகின்றன. நண்டு 680 ரூபாயிலிருந்து 430 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.


தடை காலம் நீங்கிய நிலையிலே, கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன் விலை வெகுவாக குறைந்து விற்பனை செய்யப்படுவதனால், அசைவ பிரியர்கள் கூட்டம் மீன் மார்கெட்டில் அலைமோதுகிறது.


வழக்கத்தை விட விலை குறைந்து விற்பனையாவது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img