ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்கப்பட்டன. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஆர். பார்வதி வரவேற்புரை நல்கினார்.
வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.ஜெயக்குமார், செயலர் செ.து.சந்திரசேகர் பொருளாளர் பி.கே.பி.அருண், இணை செயலர் சி.நல்லசாமி, சிறப்பு விருந்தினர் ஈரோடு அஸ்வின் மருத்துவமனையின் மருத்துவர் சித்ரா தங்கவேல், இணைப் பேராசிரியர்கள் ஆர். சாந்தி ஜே. சுகுணா என்.விஜயா, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் எஸ்.கே.கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



