உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், காவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இந்த யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.
காவலர்கள் அனைவரும் ஒரு மணி நேரமாக கை பயிற்சி, மூச்சு பயிற்சி, கண் பயிற்சி,சூரிய நமஸ்காரம், மற்றும் ஆசனங்கள், முத்திரைகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமும் யோகா பயிற்சி செய்தால் மன அழுத்தம் இன்றி ஆரோக்கியமாக வாழலாம் என்றும் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு யோகா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் இன்று யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.



