fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்லில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்

நாமக்கல்லில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்

உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம் இணைந்து கின்னஸ் சாதனை இரத்ததான விழிப்புணர்வு விழா மற்றும் ரத்ததான முகாம் நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் பங்கேற்று, குருதிக்கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த ஆண்டு, ரத்த தானம் செய்வோம், நம்பிக் கையை கொடுப்போம், இணைந்து நாம் உயிர்களை காப்போம் என்ற கருப் பொருளில் ரத்ததான தினம் கடைபிடிக்கப்பட்டது.


இந்த முகாமில் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் நிறுவனத் தின் தேசிய தலைவர் டாக்டர் சுரேஷ் முதல் நபராக ரத்தம் கொடுத்தார். அவரை தொடர்ந்து பலர் ரத்ததானம் வழங்கினர்.


இந்த முகாமில், ரத்தம் வழங்கியவர்களுக்கு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி பிரிவு மற்றும் தன்னார்வ அமைப் புகள் சார்பில், உலககுருதி கொடையாளர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் மாதேஸ்வரன் எம்.பி பேசுகையில், “அபாய கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உயிர் காக்கும் வகையில் ரத்த தானம் வழங்குவது மிகவும் போற் றுதலுக்குரியது” என்றார்.


இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் தேசிய பொதுச் செயலாளர் லிவிங்ஸ்டன் தாஸ், டிஎன்கே கட்சியின் நிறுவன தலைவர் வாழவந்தியார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தில்லை சிவக்கு மார், நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கத்தின் தலைவர் மாரிமுத்து, செயலாளர் கார்த்திகேயன், உயிர் துளிகள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முபாரக் அலி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குரு இளங்கோ, நாமக்கல் தெற்கு மாவட்ட வழக் கறிஞர் அணி செயலாளர் பழனிச்சாமி, நாமக்கல் தெற்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img