வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை – ஆராய்ச்சி மையத்தில் இதுவரை 89 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் 3 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவையில் மிக முக்கியமான இந்த சாதனை, மருத்துவத் தரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் உள்ள அவர்களின் உறுதிப்பாட்டை வெளிக்கொணர்கின்ற ஒரு மைல்கல்லாகும்.
இந்த சாதனையை குறிக்கும் விழா, ஜூன் 10, 2025 அன்று நாராயணி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநர் பேராசி ரியர் என். பாலாஜி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். புகழ்பெற்ற நடிகரும், இயக்குனருமான ஆர்.பார்த்திபன் தலைமை விருந்தினராக சிறப்பித்து பேசினார்.
இந்நிகழ்வில் டிவைன் & சகி குழுமங்களின் இயக்குனர் ஸ்ரீநாத், துணை மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவர், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஸ்ரீ நாராயணி கல்வி நிறுவனங்களின் நிர் வாக அதிகாரி டாக்டர் மாதவி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். மேலும், மருத்துவ ஆலோசகர்கள், துறைத் தலைவர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த சாதனையின் ஓர் அங்கமாக இருந்தனர்.



