கோயம்புத்தூர் கங்கா ஸ்பைன் காயம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் சார்பில் 7வது தமிழ்நாடு மாநில சக்கர நாற்காலி கூடைப்பந்து சாம்பியன் ஷிப் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி நடை பெற்றது.
ஆண்கள் பிரிவில் கோவை, ஈரோடு, வேலூர் அணிகள் விளையாடின. வேலூர் ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோவை 2ம் இடமும், ஈரோடு 3வது இடமும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் ஈரோடு, சென்னை, வேலூர் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. சென்னை முதலிடத்தையும், ஈரோடு இரண்டாம் இடத்தையும், வேலூர் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

பரிசு வழங்கும் விழா வில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி, பங்கேற்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களின் முயற்சியைப் பாராட்டினார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்து கூடைப்பந்து ஷாட்டை கலெக்டர் தனிப்பட்ட முறையில் முயற்சித்து, பாரா விளையாட்டை முதலில் அனுபவிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக கங்கா மருத்துவமனை சீனியர் பதிவாளர் டாக்டர். ராஜா பாஸ்கர ராஜசேகரன், தலைமை நிர்வாக அதிகாரி கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினார்கள்.
நிகழ்வில் கோவை சில்வர் இயக்குநர் பராஸ் புட்டானி, ஆஃப்டர்நூன் மற்றும் பிற்பகல் நாளிதழ்களின் இயக்குநர் ஆடம் அப்பாதுரை மற்றும் கோவை டிசிஎஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் எஸ்.டி.தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



