fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் மகள் திருமண வரவேற்பு விழா அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன்...

ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் மகள் திருமண வரவேற்பு விழா அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் நேரில் வாழ்த்து

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி மற்றும் மீனாம்பிகை தம்பதியரின் மகள் டாக்டர் அபிநயாவிற்கும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் செல்வ விக்னேஷ்வருக்கும் திரு மணம் கடந்த 23ம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலையில் உள்ள பிரஜாபதி மஹாலில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து மணமக்களின் வரவேற்பு விழா சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மைதானத்தில் நேற்று முன்தினம் காலை நடை பெற்றது.
விழாவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்த வரவேற்பு விழாவில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடானை கருமாணிக்கம், காரைக்குடி மாங்குடி மற்றும் தொழிலதிபர்கள், பத்திரிக்கை ஊடக நிறுவனத்தினர், ஊடகவிய லாளர்கள் நகர் முக்கிய பிரமுகர்ககள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி மற்றும் அவரது மனைவி மீனாம்பிகை, மகள் வக்கீல் அட்சயா, மகன் பொறியாளர் அருண் பாண்டி ஆகியோர் வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img