fbpx
Homeபிற செய்திகள்முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜமாப் இசைக்கு நடனமாடி அசத்தல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜமாப் இசைக்கு நடனமாடி அசத்தல்

கோவையில் ஜமாப் இசை கலைஞர்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்தினார், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சுற்று வட்டார 18 கிராமங்களில் உள்ள மக்களின் காவல் தெய்வமாக உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக எஸ்.பி வேலுமணிக்கு கோயில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் எஸ்.பி.வேலுமணிக்கு மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க நடனம் ஆடி வரவேற்றனர். அப்போது இசை கலைஞர்களின் வேண்டுகோளை ஏற்று ஜமாப் குழுவினருடன் இணைந்து எஸ்.பி.வேலுமணி நடனமாடி அசத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img