fbpx
Homeபிற செய்திகள்மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி - அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி – அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்காலில் பவானி வட்டம், குறிச்சி மற்றும் சிங்கம்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.


திருச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர் அணை கோட்டத் தில், ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள மேட்டூர் மேற்குக்கரை வாய்க்காலில் குறிச்சி, சிங்கம்பேட்டை பகுதியில் 9.75 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இப்பணியை ஈரோடு மாவட்ட நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாள ரும், பூண்டி, நீரியல் நீர்நிலையியில் ஆய்வுக் கழக இயக்குநருமான தாமோதரன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நீர்வளத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


ஆய்வின்போது, மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம், குமார பாளையம் உதவி செயற்பொறியாளர் மதுசூதனன், அம்மாபேட்டை உதவி பொறியாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img