fbpx
Homeபிற செய்திகள்இராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாளில் 325 மனுக்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு

இராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாளில் 325 மனுக்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்குறைகளை கேட்டறிந்தார்,


இக்குறை தீர்வுநாள் கூட்டத்தில் வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 325 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்.


பின்னர், பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, உதவி ஆணையர் கலால் ராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img