Homeபிற செய்திகள்பொதுத் தேர்வில் சிறப்பிடம்: ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

பொதுத் தேர்வில் சிறப்பிடம்: ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

சிதம்பரம் கனகசபை நகரிலுள்ள ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கே.ஜாபர் சாதிக், ஆர்.கார்த்திகா மற்றும் பி.பாலபிரசன்னா ஆகியோரை பள்ளியில் திங்கள்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் செயல் தலைவர் ஆர்.எம்.சுவேதகுமார், பொருளாளர் ஆர்.தர்பாரண்யன் ஆகியோர் பாராட்டி பரிசுக் கோப்பையை வழங்கினர்.


முதல்வர் ஜி.ஜெயக் குமார், துணை முதல்வர் டி.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img