அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், லாரி ஓட்டுநர்கள் மற்றும் அதன் கூட்டாளிகளின் சுகாதாரப் பரிசோதனைக்காக, ‘அப்போலோ டயர்ஸ் ஹெல்த்கேர் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்ட அதன் மொபைல் மருத்துவப் பிரிவை திறந்து வைத்தது. இந்தப் பிரிவை, அப்போலோ டயர்ஸ் லிமிடெட்டின் சென்னை ஆலையின் பிரிவுத் தலைவர் சி. தாமஸ் மேத்யூ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த மொபைல் மருத்துவப் பிரிவு, எச்.ஐ.வி/எய்ட்ஸ், பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளைத் தடுப்பது (STIs), பார்வை பராமரிப்பு, காசநோய் மற்றும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் போன்ற முக்கியமான சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த அப்பல்லோ டயர்ஸின் ஹெல்த்கேர் எக்ஸ்பிரஸ், ஒரு மருத்துவ அதிகாரி (MBBS), ஒரு மருந்தாளுநர், ஒரு கண் மருத்துவர், அவுட்ரீச் தொழிலாளர்கள் மற்றும் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோரைக் கொண்ட குழுவால் இயக் கப்படும். இது தடுப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள், பொது மருத்துவ சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட சுகாதார பரிசோதனைகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கும்.
மாதவரம், மஞ்சம்பாக் கம் மற்றும் பூந்தமல்லி ஆகியவற்றை உள்ளடக்கிய 50 கிமீ சுற்றளவில் உள்ள குறிப்பிடத்தக்க போக்குவரத்து மையங்களுக்கு இந்த நடமாடும் மருத்துவ பிரிவு சேவை செய்யும், இது 10,000க்கும் மேற்பட்ட லாரி மக்கள் தொகைக்கு சேவை செய் யும்.



