fbpx
Homeபிற செய்திகள்சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துடுப்பதி ஊராட்சி மற்றும் சிப்காட் பகுதியில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல் படுத்தப்படும் தொழில் நிறுவனங்களில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.


தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் திரு.அன்பழகன் என்பவர் ரூ.153 லட்சம் முதலீட்டில் ரூ.35.92 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெற்று “ஸ்ரீ சபரி கார் மெண்ட்ஸ்” என்ற நிறு வனம் செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்த தொழில் முனைவோருக்கு தமிழக அரசின் 35% முதலிட்டு மானியமும். வங்கிக்கடன் சரிவர திருப்பி செலுத்துவதால் 6% வட்டி மானியமும் வழங் கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேற்படி கார்மெண்ட்ஸ்” நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு. தொழில்முனைவோருடன் கலந்து ரையாடியானர். இந்நிகழ் வில்போது. பயனாளி தான் பொருளாதார ரீதியில் மேன்மையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img