fbpx
Homeபிற செய்திகள்கொல்லிமலையில் வளமிகு வளர்ச்சித்திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு

கொல்லிமலையில் வளமிகு வளர்ச்சித்திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், வரகூர் காப் புகாடு பகுதியில் வனத்துறை சார்பில் வளமிகு வளர்ச்சித்திட்டத்தின் கீழ், தடுப்பணை மற்றும் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா வன பாதுகாவலர் கலாநிதி முன்னிலையில் செய்தியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

பொதுப்பயன்பாடுகள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள துறை சார்ந்த திட்டங்களை ஒருங் கிணைத்து, கூடுதலாக அரசு உதவி தேவைப்படும் வட்டாரங்களைக் கண்டறிந்து, வளர்ச்சிக்கான வளங்களை பெருக்குவதற்கு வட்டார அளவிலான நிர்வாகங்களில், திறனை உருவாக்குவதும், பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது விரைவான வளர்ச்சியை அடைய அவற்றை திறம்பட பயன்படுத்துவது வளமிகு வளர்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொல் லிமலை வட்டாரத்தில் வளமிகு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திட தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பைல்நாடு காப்பு காடு, வரகூர் காப்புகாடு, அடுக்கம் புதுக்கோம்பை காப்பு காடு, குண்டூர் காப்பு காடு, செல்லூர் காப்பு காடு ஆகிய பகுதிகளில் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் 5 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பைல்நாடு காப்பு காடு, அடுக்கம் புதுக் கோம்பை காப்பு காடு, வரகூர் காப்புகாடு ஆகிய 3 பகுதிகளில் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், செல்லூர் காப்பு காடு பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் தடுப்பணை தூர்வாரப்பட்டுள்ளது.

காப்பு காடுகளில் தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img