சிதம்பரம் பள்ளிப் படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கம், பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமை டிஎஸ்பி லாமேக் துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், வர்த்தகர் சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ், முஸ்தபா பள்ளி தாளாளர் அன்வர் அலி, மருத்துவர்கள் பிரவீன்குமார், அங்கிதாசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கம் தலைவர் அப்துல் மாலிக், சமுதாயப் பணி தலைவர் தமிழ்முல் அன்சாரி, துணைத் தலைவர் மணிவண்ணன், செயலாளர் ரியாஸ், பொருளாளர் நவாஸ், துணைப் பொருளாளர் பிரசாந்த், துணைச் செயலாளர் சேக் மீரான், ஓட்டுனர் சேவை கரங்கள் மாநில செயலாளர் ரத்தினபிரபு, மலரும் நினைவுகள் ரத்த தான அறக்கட்டளை நிறுவனர் முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 350 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 30 மேற்பட்ட பயனாளிகள் கண் அறுவை மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.