fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட சப்-ஜூனியர் கராத்தே போட்டிகள்

கோவை மாவட்ட சப்-ஜூனியர் கராத்தே போட்டிகள்

கோவை மாவட்ட மிக இளையோர் (சப் ஜூனியர்) கராத்த போட்டிகள் – 2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கே சர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் கே. பக்தவச்சலம், பள்ளியின் தாளாளர் தேவ பிரகாஷ், பள்ளியின் முதன்மை நிர்வாக இயக்குனர் லலிதா பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போலீஸ் அதிகாரி ஆர்.சரவணன். கே சர் பள்ளி முதல்வர் எம்.சசிபிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.

எஸ்ஜிஎஃப் ஐ எனப்படும் தேசிய பள்ளிகளுக்கு இடையான கராத்தே போட்டியில் கோவை மாவட்டத்தில் இருந்து பங்கு பெற்று பதக்கம் வென்ற ஆறு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
டாக்டர் கே.பக்தவச்சலம் பேசும்பொழுது பெற்றோர்களுக்கு அறி வுரையாக, வீட்டில் உள்ள டிவியை விற்கும்படியும், பொத்தான் கைபேசியை உபயோகப்படுத்தும் படியும் தினமும் உடற்பயிற்சி செய்யும் படியும் யோகா மற்றும் தெய்வக் குழு பாடல்கள் கற்றுக் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

சான்றிதழ் பதக்கம் மற்றும் பெப்ஸ் பெட்ஸ் கம்பெனி வழங்கிய தலையணையும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
போலீஸ் அதிகாரி சரவணன் பேசும் பொழுது மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியமான ஒன்றாகவும் அவர்களுடைய கவனக்குறைவு கவனம் விளையாட்டின் மூலம் மேம்படும் எனவும் மாணவர்களை ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன், நடராஜன். செயலாளர் கராத்தே ராஜா, வைஸ் துணைத் தலைவர் சுரேஷ், தொழில்நுட்ப இயக்குனர் எஸ்விஎஸ் முருகேஷ், சேர்மன் கதிரேசன் மற்றும் அனைத்து நடுவர் பெருமக்களும் மாவட்ட சங்கத்தின் மூலம் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img