கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரோஜ்கார் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கோயம்புத்தூர் வருமான வரித்துறை அலுவலகத்தின் தலைமை ஆணையர் அருண்.சி.பரத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு பெற்ற 25 நபர்களுக்கு நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், வருமான வரித்துறை, தபால் துறை, வனத்துறை, ரயில்வே மற்றும் வங்கித் துறை என ஒன்பது மத்திய அரசு துறைகளில் சேர்வதற்கான பணி நியமன ஆணைகளை மொத்தம் 143 பேர் பெற்றுக் கொண்டனர்.
பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு, பிரதமர் மோடியிடமிருந்து வேலைவாய்ப்பு ஆணைகளை பெரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பாயிண்ட்டுகளிலும் நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.



