fbpx
Homeபிற செய்திகள்போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு: பேராயர் பால்ஆலப்பாட் தலைமையில் நாளை கூட்டுப் பாடல் திருப்பலி

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு: பேராயர் பால்ஆலப்பாட் தலைமையில் நாளை கூட்டுப் பாடல் திருப்பலி

மறைந்த போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை ரோம் நகரில் நடைபெறுவதை யொட்டி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் சீரோ மலபார் கோவை ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் சார்பில் ஆன்ம இளைப்பாறுதலுக்காக பேராயர் பால்ஆலப்பாட் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி பரிசுத்த திருத்துவப் பேராலயத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

மறைமாவட்ட குருக்கள், அருட் கன்னியர்கள், மறைமாவட்ட பொதுநிலையினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேராயர் பால் ஆலப்பாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக பரிசுத்த திருத்துவ பேராலயத்தில் நடைபெற்ற இறையழத்தல் வழிபாட்டின் நிறைவாக அருட்சகோதரர்கள் ஆல்வின், பிக்சன், டெல்வின், ரோஷன், சால்மன் ஐந்து பேருக்கு முதல் வார்த்தைப்பாடும் குருத்துவ மாணவர்களுக்குரிய அங்கி அணிவித்தலும் நாளை சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு பேராயர் பால்ஆலப்பாட் தலைமையில் நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img