fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் தி பள்ளியில் நடந்த குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

சிதம்பரம் தி பள்ளியில் நடந்த குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

சிதம்பரத்தில் உள்ள தி பள்ளி மற்றும் தி மெட்ரிக்மேல் நிலைப் பள்ளியில் மழலை மாணவர்களுக்கான பட்ட மளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் மகேஷ் தலைமை தாங்கினார். தி பள்ளி முதல்வர் கவிதா மகேஷ், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் அருண்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் லட்சுமணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மழலை மாணவ, மாணவிகளுக்கு பட்ட ங்கள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கினார். தொடர்ந்து மழலை மாணவ, மாணவிகளின் பல் வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பேராசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மழலை மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தி பள்ளி தலைமையாசிரியர் மீனம்மாள் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img