fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கடலூர் கலெக்டர்

பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கடலூர் கலெக்டர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம், உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொது மக்கள் அளித்தனர்.


மொத்தம் பொது மக்களிடமிருந்து 1,105 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் விதிமுறை களுக்குட் பட்டு நடவ டிக்கை எடுக்க சம்பந்த ப்பட்ட துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.


கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 9 பயனாளிக ளுக்கு இலவச மனைப்பட் டாவுக்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 4 மாற்றுத்திற னாளி பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பீட்டிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை யும், மேலும், நேற்று மடக்கு ஊன்றுகோல் கேட்டு மனுஅளித்த மாற்றுத்திறனாளி பய னாளிக்கு உடனடியாக ரூ.3,500 மதிப்பீட்டிலான மடக்கு ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண் ணாடியை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ராஜசேகரன், மாவ ட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பாபு, மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் சங்கர்,மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


வழக்கமாக வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் குறை கேட்பு கூட்டத்துக்கு அதிக பட்சமாக சுமார் 850 பேர் வரை வந்து மனு அளிப்பார்கள். ஆனால் நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img