உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீல நிற பலூன்கள் பறக்க விட செய்தார்.
அதனை தொடர்ந்து வாக்கத் தான் நிகழ்வை துவக்கும் போது கொடியை ஆட்டிசம் சம்பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை பிடித்து அசைக்க செய்து வாக்கத்தானை துவக்கி வைத்தார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ஆட்டிசம் குறித்து மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பல்வேறு அறிவுரைகள் விழிப்புணர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகளை கண்டுபிடித்தால் உடனடியாக அதற்கான சிகிச்சை களை அளிக்கலாம் எனவும் அதனை பல்வேறு தனியார்
அமைப்புகளுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.



