fbpx
Homeபிற செய்திகள்கோவை ராவ் மருத்துவமனை சார்பில் நடந்த எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை ராவ் மருத்துவமனை சார்பில் நடந்த எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு வாக்கத்தான்

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் கோவையில் ராவ் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.

கோவை கிளை இந்திய மருத்துவ சங்கம், தி மேஜிக் ஆஃப் ரோட்டரி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் அக்ருதி, ப்ளாசம், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி ஆகியவையுடன் இணைந்து இந்த வாக்கத்தான் நடந் தது.
இது குறித்து ராவ் மருத்துவமனையின் தலை வர் டாக்டர். ராகவேந்திரா ராவ் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர். ஆஷா ராவ் ஆகியோர் கூறியதாவது:

ராவ் மருத்துவமனை, ராவ் மருத்துவமனை எண்டோ மார்ச் 2025 இன் இரண்டாவது பதிப்பை ஆர் எஸ் புரத்தில் உள்ள மருத்துவமனை வளாகத் தில் நடத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டாக்டர். தாமோதர் ராவின் நிபு ணத்துவத்தின் கீழ், 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச் சைகளை வெற்றிகரமாகச் செய்து, குறிப்பிடத்தக்க அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எண்ணற்ற பெண்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ராவ் மருத்துவமனை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாக்கத்தான் நிகழ்வை கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ரங்க நாயகி நடை பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ராவ் மருத்துவமனையின் உதவி இயக்குனர் டாக்டர். தாமோதர்ராவ், இயக்குனர் (நிர்வாகம்) தீபிகா ராவ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img