கோவையில் 16 வயதிற்குட் பட்ட மாணவர்களுக்கான இடையிலான மாநில அள விலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து சாம் பியன்ஷிப் போட்டி நடத்தியது.
இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள மாவட் டங்களுக்கு ஒரு அணி என 38 அணிகளும், கோவை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களுக்கு இரண்டு அணி என மொத்தம் 41 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இப்போட்டிகள் முதல் மூன்று நாட்களுக்கு லீக் போட்டியாகவும் கடைசி இரண்டு நாட்கள் நாக் அவுட் போட்டிகளாக நடை பெறுகிறது.
இப்போட்டிகள் கடந்த 29ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை 5 நாட்களுக்கு கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கூடைப்பந்து கழக விளையாட்டு அரங்கம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கூடைப்பந்து அரங்கிலும் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும். மேலும் 12 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான அணிக்கு விளையாட தேர்ந் தெடுக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை பாண்டிச்சேரியில் நடைபெறும் தேசிய அள விலான கூடைப்பந்து போட் டிக்கு விளையாட தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற துவக்க விழா நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களை வாழ்த்தினார்.
விழாவிற்கு கௌரவ விருந்தினராக பாரதி இன்ஸ் டிடியூஷன் தாளாளர் சஞ்சீவ் ஆனந்த் கலந்து கொண்டார். கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் மற்றும் கோவை சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனருமான செல்வர£ஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட கூடைப்பந்து கழக துணைத் தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
இப்போட்டிகளை பொது மக்கள் இலவசமாக பார்வையிட்டு வருகின்றனர்.



