fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆடவர் என்சம்பிள் வழங்கிய கல்வாரி பாடல் தியானம்

கோவை ஆடவர் என்சம்பிள் வழங்கிய கல்வாரி பாடல் தியானம்

கோவையில் கல்வாரி குருசின் பாடுகளின் தியானம், பாடல் வழியாக ஒரு சங்கிணைப்பு என்ற தலைப்பில், கோவை ஆடவர் (Male) என்சம்பிள் குழுவினர் சிறப்பு இசை தியானத்தை நடத்தினர்.


இந்த நிகழ்வு கோவை ராஜா தெருவில் உள்ள டிஇஎல்சி கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.


இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், அவரின் திருச்சிலுவைத் தியாகத்தையும் சிந்தனை செய்ய இசையின் வழியாக அழைத்துச் செல்லும் இந்த நிகழ்வை ஆ.தன் ராஜ் (ஆசிரியர் மற்றும் தலைவர்) நடத்தினார்.

ஏற்பாடுகளை செயலாளர் ஜான் பிலிப்ஸ், பொருளாளர் வின்சென்ட் பால் ஆகியோர் போதக சேகரக் குழு மற்றும் குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஏற்பாடு செய் திருந்தனர்.


இந்நிகழ்வு, பிரார்த்தனை மற்றும் பாடல்களின் மூலம் இயேசுவின் தியாகத்தை ஆழமாக உணரவும் நினைவுகூரவும் ஒரு வாய்ப் பாக இருந்தது.


கோவை ஆடவர் என்சம்பிள், எப்போதும் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மிகத் தீவிரமான இசை நிகழ்ச்சிகளை வழங்கும் குழுவாகப் பாராட்டப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img