fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வரும் 9ம் தேதி தவக்கால ரத்த தான முகாம்

கோவையில் வரும் 9ம் தேதி தவக்கால ரத்த தான முகாம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புனித வின்சென்ட் தே பவுல் சபையின் புனித அருளானந்தர் ஆலயத்தில் ரத்த தான முகாம் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தவக்காலத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இந்த முகாம் நடைபெற உள்ளது.

இது காலை 09.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அரசு மருத்துவமனையில் உள்ள ஏழை எளிய மக்களின் ரத்தத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு பயன்படும் எனவும் ரத்ததானம் செய்ய விரும்புவோர், முன்பதிவுக்கு ரவி ஆல்பிரட், அருள்ராஜ் ஆகியோரை 99428 58888, 96291 98234 இந்த எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என ஆலய நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img