fbpx
Homeபிற செய்திகள்அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்த்த பொதுமக்கள்

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்த்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருத்துவாம் பாடி ஊராட்சியில் நேற்று (6ம்தேதி) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனைகள், நலத்திட் டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருத்துவாம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

இப் புகைப்பட கண்காட்சியில், திரு வண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட விளக்க புகைப்பட தொகுப்புகளை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட் டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து அறிந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img