fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மைய முதலாம் ஆண்டு விழா

கோவை ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மைய முதலாம் ஆண்டு விழா

ஆசியாவின் மிகப் பெரிய வெளிநோயாளிகள் மருத்துவ மையமாக திகழும் ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் வெளி நோயாளிகள் மருத்துவ மையம் (IOP) நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை கனிவான கவனிப்புடன் அளிப்பதில் தன்னிகரற்ற விளங்குகிறது.

இதன் ஆண்டு விழா இன்று (5ம் தேதி) ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகக் குழுவினர், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

குப்புசாமி நாயுடு அறக் கட்டளையின் தலைவர் எஸ்.பதி கூறியதாவது ஜி.கே.என்.எம். மருத்துவ மனையில் நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் மூலம் சிறப்பான மற்றும் விரிவான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதுதான் எங்களின் குறிக்கோள், எங்களது ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில், ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தேவைப்படும் பிரத்தியேகமான சிகிச்சைகளை தனிகவனத்துடன் அளித்து வருகிறோம். இதில் அலோபதி மற்றும் மாற்று மருத்துவம் இரண்டும் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி இந்நிகழ்வில் பேசுகையில், எங்கள் ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில், நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் நோய்களுக்கு உரிய சிகிச்சை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு உண்டான தடையற்ற பல்வேறு சிகிச்சைகளைப் பெறுகிறார்கள்.

மேலும் நோயாளிகள் மருத்துவ மனையில் இருப்பதாக உணராமல், வீட்டில் இருப்பதை போன்ற உணர்வினை அவர்களுக்கு அளிக்கின்றோம். தனிப் பயனாக்கப்பட்ட, கனி வான கவனிப்பு மற்றும் பல்நோக்கு மருத்துவ அமைப்பு ஆகியவற்றினை ஒருங்கிணைப்பதன் மூலம் வெளிநோயாளிகளுக்கான மருத்துவ சேவையின் புதிய உயரத்தை எட்டியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமும் 1200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்குதல்: சரியான நேரத்தில் மற்றம் விரிவான வெளிநோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளை வழங்குதல், பல்வேறு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் ஆயுர்வேதம், யோகா போன்ற மாற்று மருத் துவ முறைகளை ஒருங்கிணைத்து தனிச் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்குதல், சிறப்பு சேவைகளை விரிவுபடுத்துதல்: அனுபவம் வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களை கொண்ட மெனோபாஸ் கிளினிக் மற்றும் நீரிழிவு பாத பராமரிப்பு கிளினிக் ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு தேவையான பிரத்தியேகமான மருத் துவ சிகிச்சைகளை வெளி நோயாளிகள் பெறுகிறார்கள். இதுவே முதல் ஆண் டில், ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத் துவ மையத்தின் சாதனைகளாகும்.

சிறப்பான சேவையினை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆதரவு அளித்து வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தனது நன்றிகளை ஜி.கே.என்.எம் வெளிநோயாளிகள் மருத் துவ மையம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img