fbpx
Homeபிற செய்திகள்வரவேற்பை பெற்றுள்ள பிரமல் பைனான்சின் ஆய்வு குறும்படம்: இணையத்தில் வைரல்

வரவேற்பை பெற்றுள்ள பிரமல் பைனான்சின் ஆய்வு குறும்படம்: இணையத்தில் வைரல்

வாடிக்கையாளர்களின் நல்ல நோக்கத்தை மனதில் கொண்டு பிரமல் பைனான்சின் ப்ரத்யேக குறும்படமான ‘ஆய்வு’ வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இந்த வீடியோ இதயத்தைத் தொடும் உருக்கமான கதையுடன் நம்மை நெகிழவைக்கும். இந்த குறும்படமானது, ஐந்து பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

இந்தத் திரைப்படங்கள் கடன் வாங்குபவர்களின் ஆழமான உணர்ச்சியையும் நல்ல நோக்கத்தையும், தேவையையும் எடுத்துக் காட்டுகிறது.

‘ஆய்வு’ குறும்படம் மூலம் பிரமல் பைனான்ஸ் அதன் வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள் என் பதை எடுத்துக் காட்டுகிறது. நடிகர் நிழல்கள் ரவி தொகுத்து வழங்கும் இதயப்பூர்வமான நேர்காணலாக இந்த வீடியோ துவங்குகிறது.

ஏழ்மையான சூழலில் ஓட்டு வீட்டில் வாழ்ந்த அபிஷ் கிளிண்டனின் கதை இது. மாத சம்பளத்தில் இருந்த அபிஷ் எப்படி வீட்டு உரிமையாளர் ஆனார் எனும் நம்பிக்கைக்குரிய கதையை வெளிப்படுத்துகிறது.

வீடு வாங்கும் தனது பயணத்தில் அவர் சந்தித்த சவால்கள் மற்றும் வெற்றிகளை அபிஷ் கூறியுள்ளார்.

இது பிரமல் பைனான்ஸின் யூடியூப் சேனலிலும், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத் திலும் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

இது குறித்து பிரமல் பைனான்ஸின் சந்தைப்படுத்தல் தலைவர் அரவிந்த் ஐயர் கூறியதாவது: இந்த குறும்படமான ஆய்வு சிறந்த எதிர்காலத்தைத் தேடுவதில் உறுதியாக இருக்கும் தனி நபர்களின் கனவுகளை அங்கீகரிப்பது பற்றியது.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img