ஈரோடு மாவட்டம் தாளவாடி ஸ்ரீபண்ணாரி அம்மன் தொண்டு அறக்கட்டளை மூலம் தாளவாடி, ஆசனூர் சுற்றியுள்ள மலைவாழ்மக்கள், ஏழை எளியோர் மற்றும் முதியோர்களின் முன்னேற்றத்திற்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தருதல், இலவச உடைகள் வழங்குதல், பொருளுதவி வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற
உதவி கள் லாபநோக்கற்ற முறையில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, அறக்கட்டளை சார்பில் 76 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு தாளவாடி மலைகிராமங்களான சோழர்தொட்டி, திகினாரை ஆகியவற்றில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு 200 பேருக்கு இலவச சேலைகள் அறக்கட்டளைத் தலைவர் எஸ்.மாணிக்கம், துணைத்தலைவர் எ.தினேஷ்குமார், செயலாளர் வி.நந்தீஸ்வரன், பொறுப்பாளர் எம்.ராணி உள்ளிட்டோர் கிராமங்களுக்கே நேரில் சென்று வழங்கினர். இலவச சேலைகளை பெற்றுக்கொண்ட மலைவாழ் மக்கள் தங்களது மகிழ்ச்சி யினையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.



