fbpx
Homeபிற செய்திகள்திண்டுக்கலில் ஈஷா மண் காப்போம் இயக்க கருத்தரங்கு

திண்டுக்கலில் ஈஷா மண் காப்போம் இயக்க கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம் எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் 9ம் தேதி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.
இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக் குமார், கோவை கந்தசாமி பங்கேற்று பேசினார்கள்

அப்போது அவர்கள் கூறியதாவது: ஈஷா மண் காப்போம் இயக்கம் தமிழகத்தை இயற் கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடு 20 வருடங்களாக செயல் பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” என்ற மாபெரும் கருத்தரங்கை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வரும் 9ம் தேதி நடத்தவுள்ளது.

இதில் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img