கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோவை மத்துவராயபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் சார்பில் காருண்யா நகரில் உள்ள சீஷா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலாளர் ஞானபிரகாசம், பொருளாளர் செல்வன் ஜெயசிங் மற்றும் கோவை திருமண்டலக்குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஆனந்த் ஆசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



