Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரியில் தேசிய நூலக வாரவிழா: புத்தகங்கள் எழுதி வெளியிட்ட சாதனை மாணவிகளுக்கு விருது

நிர்மலா கல்லூரியில் தேசிய நூலக வாரவிழா: புத்தகங்கள் எழுதி வெளியிட்ட சாதனை மாணவிகளுக்கு விருது

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி நூலகத்துறை சார்பில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர். அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் முன்னிலை வகிக்க, நூலகத்துறைத் தலைவர் முனைவர் அருட்சகோதரி ஜாக்குலின் வரவேற்புரை வழங்கினார். இளம் வயதில் பல புத்தகங்களை படைத்து உலக சாதனையில் இடம் பெற்ற மாணவியான முதுநிலை ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி ஸ்ரீ, மற்றும் பல புத்தகங்களை வெளியிட்டுள்ள இளநிலை, முதுநிலை பயிலும் மாணவிகள் ஜனனி, நிஷா ஆகியோரைப் பாராட்டி சிறப்பு மிகு இளம் எழுத்தாளர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நூலகத்துறைப் பேராசிரியர்கள் தேசிய நூலக வார விழாவின் சிறப்பினையும்,
நூல்களின் முக்கியத்துவத்தையும், எடுத்துரைத்தனர். பல இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் வகையில் இவ்விழாவானது நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img