Homeபிற செய்திகள்தென்னிந்திய கராத்தே போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி

தென்னிந்திய கராத்தே போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி

கோவையில் நேற்று (24ம் தேதி) ஞாயிறு அன்று சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் 7வது தென்னிந்திய ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2024 கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதில் இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்து கோவை மாண வர்கள் அசத்தி உள்ளனர். கார்த்திகேயன், ரீனெஸ் ஜெகநாதன் ஆகியோர்- இரண்டாம் இடத்தையும் சுஜன், தர்ஷன், சஷ்வத், சுதர்சன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அரேனா 18 பயிற்சி பள்ளி சாதனை மாணவர்களுக்கும் முதன் மைப் பயிற்சியாளர் ப.செந்தில் குமார் மற்றும் பயிற்சியாளர் ரா.மதன் குமார் ஆகியோருக்கும் பெற்றோர்கள், பொது மக் கள் வாழ்த்து தெரிவித் தனர்.

படிக்க வேண்டும்

spot_img