திருவண்ணாமலை போளுர் வட்டம் எடப்பிறை கிராமத்தைச் சார்ந்த தருண் கலசப்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பதினோராம் வகுப்பு தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த பொழுது தென்னங்காய்களை பறிப் பதற்காக மரத்தில் ஏறி தவறி விழுந்து விட்டார். இதில் முதுகு தண்டுவடம் கடு மையாக பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலி கொண்டு மட்டுமே பயணித்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. சார்ந்த பள்ளி நிர்வாகம் மாணவர் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிக்கு வராத நிலையில் பள்ளியிலிருந்து அவரை நீக்கியது.
மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ள நேரத்தில் பள்ளி படிப்பும் தடைபட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை அணுகி தங்கள் மகன் தொடர்ந்து 12ம் வகுப்பு படிப்பதற்கு உதவி செய் யுமாறு கோரிக்கை வைத்தனர்.
மாணவருக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஊக்கம் அளித்து பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவரை உடனடியாக பள்ளியில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மாணவரை திருவண்ணாமலை சண் முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் சேர்த்து மாணவர் தொடர்ந்து படிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
தொடர்ந்து மாணவர் தருண் தன் தந்தையுடன் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவருக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வாழ்த்துக்களையும் வழங்கி நன்கு படிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



