Homeபிற செய்திகள்பவானி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை முயற்சி

பவானி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை முயற்சி

காரமடையை அடுத்துள்ள மங்களக்கரைப்புதூர் எத்தப்பன் நகர் பகுதியைச்சேர்ந்தவர் அஜித்குமார்(23). கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். திருமணமாகாதவர். தாய், தந்தை இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அஜித்குமார் தனது உறவினர்களுடன் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது,அஜித்குமார் உறவினர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்லித்துறை வனபத்ரகாளியம்மன் கோவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து மதுபோதையில் அஜீத்குமார் பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை காப்பாற்றும் படி பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளனர். அப்போது,அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த லைப் கார்ட்ஸ் குழுவின் உதவி ஆய்வாளர் ராஜன் தலைமையிலான குழுவினர் பரிசல் மூலமாக சென்று ஆற்றில் குதித்து ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையொட்டி அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவிக்கு பின்னர் தகுந்த அறிவுரை கூறி உறவினர் சீனிவாசனிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
மதுபோதையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படிக்க வேண்டும்

spot_img