Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் ஒற்றை யானை உலா: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி மலைப்பாதையில் ஒற்றை யானை உலா: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனி தர்களையும் அவ்வப் போது அச்சுறுத்தி வருகின்றன.

குறிப்பாக கோத்தகிரி சாலை மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்திற்கு இடையில் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் இச்சாலையினை கடந்து வனப்பகுதியின் ஒரு புறம் இருந்து மற்றொரு புறம் செல்வது வழக்கம். இந்த நிலையில் மேட் டுப்பாளையம் – கோத்தகிரி சாலைகளில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவு அருகே இந்த ஒற்றை காட்டு யானை சாலை யோரம் உலா வந்தது.இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரமாக அதனை விரட்ட முற்பட்டனர்.
இருந்தும் யானை அங்கிருந்து சென்று இரண்டாவது வளைவு அருகே நின்றது. தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த யானை வனப்பகுதிக்குள் சென் றது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து வாகனங்களை எடுத் துக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து மேட்டுப் பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறு கையில் கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.

கோத்தகிரி சாலையின் வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட் டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையிடனும் வாகனங்களை இயக்க வேண்டும். சாலையோ ரங்களில் யானையை கண்டால் இறங்கி அதனை தனியாக விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது.

அதேபோல் அதன் அருகே சென்று செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவும் முயலக்கூடாது. மேலும், யானையை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img