உலக இருதய தினத்தை ஒட்டி கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி 29ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஜிகேஎன்எம் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறியதாவது:
ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை ஒட்டி இரண்டாவது பதிப்பாக ரன் ஃபார்லிட்டில் ஹார்ட் என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி வருகிற 29ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
3 வெவ்வேறு பிரிவுகளாக அனைவரும் இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்கலாம். குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றாக ஓடலாம்.
அதை போன்று 12 வயது முதல் 18 வயது உடைய ஆண்களும் பெண்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
10 கிலோமீட்டர் பிரிவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம். ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.75 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அவர் கூறினார் இதையொட்டி நடைபெற்ற விழாவில் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியிட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
அதை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி அறிமுகம் செய்து வெளியிட்டார்.



