கோவை பச்சாபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 23வது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், சிஇஓ தீனதயாளன், ஸ்ரீராம் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் எம்.டி., ஸ்ரீராம் ஸ்பிராய்ட்ஸ் – கிராஃபைட்ஸ் (பி) லிமிடெட் தலைவர், என்ஐக்யூஆர் கோயம்புத்தூர் பிரிவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும் கிளியர் டெக் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் புலியூருடையன்
கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையேற்று, சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பேங்க் ஆஃப் நியூயார்க் வணிக ஆய்வாளர் முன்னாள் மாணவி பிரியா கலந்து கொண்டார். மேலும் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் முனைவர் என் ஆர் அலமேலு வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக விழாவின் வரவேற்புரையைக் கல்லூரி முதல்வர் டேவிட் ரத்தினராஜ் வழங்கினார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறைத்தலைவர் அனிலா நன்றி உரை வழங்கினார் .



