fbpx
Homeபிற செய்திகள்வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவரின் மகன் திருமணம் அரசியல் கட்சியினர் வாழ்த்து

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவரின் மகன் திருமணம் அரசியல் கட்சியினர் வாழ்த்து

விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விசுவநாதன் பேரனும், வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி.வி.சம்பத் அனிதா சம்பத் தம்பதியர் மகனுமான நிதின் சம்பத்துக்கும், சென்னை அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குனர் கே.டி.வெங்கடேசன் லலிதா தம்பதியரின் மகள் அபிராமிக்கும் நடைபெற்ற திருமண விழாவில் பல தரப்பினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே. கன்வென் ஷன் மகாலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் தமிழக அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பி ரமணியன், சேகர் பாபு, டி.ஆர். ரகுபதி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காந்தி, சி.வி.கணேசன், எம்பிக்கள் வைகோ, தயாநிதி மாறன், ஜெகத் ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த், துரை வைகோ, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், எம்எல்ஏக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந் தகை, அசோகன், கார்த்தி கேயன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் லட்சுமி நாராய ணன், காவல் துறை டி.ஜி.பி.க்கள் சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img