மத்திய அரசின் பட் ஜெட்டில் மகளிர் நலன் குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடி டி.எஸ்.எஃப் ஹோட்டலில் நடை பெற்றது. இதில், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசியத்தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர் களிடம் அவர் பேசியதாவது:
பாரத பிரதமர் மோடி 3வது முறையாக சிறப்பான பட்ஜெட்டை தாக் கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர டியாக சென்றடையும் வகையில் அமைந்துள்ளது.
பட்ஜெட்டில் தமிழ் நாட்டின் பெயர் குறிப் பிடவில்லை என்பதால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வில்லை என்பதில்லை. முத்ரா கடன் திட்டத்தில் மற்ற மாநிலங்களைவிட எண்ணற்ற ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொரு ளாதாரத்தில் 5வது வளரும் நாடாக திகழ்கிறது. திமுக ஆட்சியில் தங்களது குறைகளை மறைப்பதற்காக பிரதமர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை வைக் கின்றனர். தமிழகத்திற்கு வெள்ள நிவாரன நிதி அளிக்கவில்லை என்று கூறுகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு தமிழக அரசிற்கு கொடுத்த பணத் திற்கு கணக்கு சொல்ல மறுக்கின்றனர்.
தூத்துக்குடியில் ஏற் பட்ட வெள்ளத்தின் போது இங்குள்ள மக் களின் உயிர்களை காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி பொருட்களையும் வழங்கி மக்களை மீட்க ஏற்பாடுகளை செய்தது நமது நிதியமைச்சர் தான்.
மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோச மாக உள்ளது விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி பத்திரப்பதிவு உயர்வு எதைத் தொட்டாலும் சாக்கு அடிக்கும் நிலைக்கு திமுக அரசு உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு மக்களை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக மத் திய அரசு பட்ஜெட்டை குறைகூறி வருகிறார்கள் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி, ஒபிசி அணி மாநில துணை தலைவர் விவேகம் ரமேஷ், மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், மகளிர் அணி மாவட்டதலைவர் தேன்மொழி, உஷா தேவி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர்கள் சிவ ராமன், சரஸ்வதி, மாவட்ட செயலாளர்கள் வீரமணி, கணல் ஆறுமுகம், ராஜ புணிதா, கல்வியாளர் பிரிவு மாவட்ட துனை தலைவர் சுதா, அழகர் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரியதர்ஷனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



