fbpx
Homeபிற செய்திகள்ஆன்லைன் கட்டிட அனுமதி கட்டணம்- மறுஆய்வு

ஆன்லைன் கட்டிட அனுமதி கட்டணம்- மறுஆய்வு

புதிதாக அறிமுகப்படுத் தப்பட்ட ஆன்லைன் மூலம் கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குவதின் கீழ் கட்டண உயர்வு ஏற்பட்டதாக தெரிவித்ததை அடுத்து முதலமைச்சர் அந்த கட்டணங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு குமலன் குட்டை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை அவர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 313 மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட உள் ளது. இதன் மதிப்பு 6 கோடி ஆகும். காவிரியில் தண்ணீர் அதிகம் திறக்கப்பட்டுள்ளது. நதிக்கரை ஓரம் தாழ்வான 41 பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாம் தேதி ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

ஆன்லைன் மூலம் கட்டிட வரைபடம் பெறுவது உடனடி சாத்தியமாகும். சிலர் கட்டிட பணிகளை துவக்கிய பிறகு ஒப்புதல் கோரி விண்ணப்பிக்கின்றனர். இதற்கு முன்பு நேரடியாக கட்டிட வரைபட பெறுவதற்காக பொதுமக்கள் பல அரசு அலுவலகஙாகளுக்கு செல்ல வேண்டும். முன்பு 4-5பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப் பட்டது. தற்பொ ழுது அனைத்தும் ஒருங்கி ணைத்து கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை மறு ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கீழ் பவானி வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் கோர்ட் உத்தரவின் படி நடந்து வருகின்றன. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் உள்ள கால்நடை பூங்கா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது ஏன் இன்னும் திறக்கப் படவில்லை என்பது குறித்து துறை சார்ந்த அமைச்சர் பதிலளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img