தென்னிந்தியாவின் ஜவுளி சாம்ராஜ்ஜியம் தி சென்னை சில்க்ஸ் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாக தி சென்னை சில்க்ஸ் – ஸ்ரீகுமரன் தங்க மாளிகை தூத்துக்குடி கிளை இன்று பிரம் மாண்டமாக துவக்கப்பட்டது.
தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் டி.கே.சந்திரன், கு.சிவலிங்கம், கு.விநாயகம், கு.நந்தகோபால், கு.பரமசிவம் மற்றும் திருமதி செல்வி சந்திரன், செயல் இயக்குநர்கள் விக்ரம் நாராயண், வினீத்குமார், கௌசிக் குமாரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திறப்புவிழா சலுகையாக ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில் சவரனுக்கு இதுவரை கண்டிராத வகையில் ரூ.2000 தள்ளுபடியும், பெரும்பாலான வெள்ளி ஆபரணங்களுக்கு சேதாரம் இல்லாமலும், வைரக்கற்களுக்கு 20% தள்ளுபடியும் வரும் 17.07.2024 வரை அளிக்கப்படுகிறது.
தி சென்னை சில்க்ஸ் உயர்தர பட்டாடைகள் திறப்பு விழாவையொட்டி மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் வினீத்குமார் தெரிவித்தார்.



