fbpx
Homeபிற செய்திகள்சிறப்பு திட்டங்கள் மூலம் மக்கள் குறைகளுக்கு விரைவில் தீர்வு

சிறப்பு திட்டங்கள் மூலம் மக்கள் குறைகளுக்கு விரைவில் தீர்வு

நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி ஊராட்சி ஒன்றியம் (தேவ ராயபுரம், பவித்திரம், பவித்திரம் புதூர்,வரதராஜபுரம்,வரகூர்) ஆகிய கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பவித்திரம் பகு தியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாநில வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், சேந்த மங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உள் ளிட்டோர் கலந்துகொண்டு, முகாம் களில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் அந்தந்த துறை களில் கணினியில் பதிவு செய்யப்ப டுவதை பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவி குழுவினர், தொழில் முனைவோர் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன், பாராளு மன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஸ்குமார் ஆகியோர் வழங்கினர்.

முன்னதாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம்கள், மனுக்கள் பதிவேற்றம் ஆகியவற்றையும் அமைச்சர் மதி« வந்தன் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து அவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 8.74 லட்சத்திற்கும் மேற் பட்ட மனுக்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் மட்டும் சுமார் 11,604 மனுக்கள் பெறப்பட்டு, 10,500 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

மக்களை நேரடியாக அரசு துறை அலு வலர்கள் சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இது போன்ற முகாம்களை, நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் அரசு நடத்தி வருகிறது. இதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் மதி வேந்தன் பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார், எரு மப்பட்டி பகுதியில் நீண்ட நாள் இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ. 358 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்து பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால், இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இத்திட்டம் செய்து முடிக்கப்பட்டு, பொது மக்களுக்கு பங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில், அட்மா குழுத் தலைவர் பாலசுப்பிரமணி, எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, எருமப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் வ.சங்கீதா, பவித்திரம் ஒன்றிய குழு உறுப்பினர் கௌசல்யா விமல் மற்றும் அரசுத்துறை அலுவ லர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img