தூத்துக்குடி கம்மவார் நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா லட்சுமி மஹாலில் நடைபெற்றது.
இதில் விவேகம் ரமேஷ் டாக்டர் குமரன் விஎஸ்எஸ் பஸ் கம்பெனி உரிமையாளர் ஜோசப், போல் பேட்டை திமுக மாவட்ட பிரதிநிதி பிரபாகரன் மாநகராட்சி சுகாதர ஆய்வாளர் ஹரி கனேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவில் சிறு குழந்தைகளுக்கான நடனம், பாட்டு, கவிதை & கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கம்மவர் நல சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.



