கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பாக சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி அனைவரையும் வரவேற்றார் .கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார்.
ஸ்லும்பெர்ஜர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மைய தலைவர் ரவிச்சந்திரன் துரைராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக ஈசி கவுன்சிலின் முதன்மை கல்வியாளர் குமார் ஈஷான் கலந்துக் கொண்டு சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இதில், சைபர் பாதுகாப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு, இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆடிட் அண்ட் கோவெர்னன்ஸ் , கம்ப்யூட்டர் ஹேக்கிங் போரென்சிக் இன்வெஸ்டிகேட்டர், ஈசி கவுன்சிலின் உறுதுணையுடன் வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி லட்சுமி நாராயணசுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .



