fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மொழிகளின் சிறப்பு குறித்த கருத்தரங்கம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மொழிகளின் சிறப்பு குறித்த கருத்தரங்கம்

இக்கருத்தரங்கில், கோயம்புத்தூர் சின்மயா பள்ளிகள் மற்றும் சின்மயா மிஷனின் ஆன்மிக வழிகாட்டி பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வி.மு. உமாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில்

“இந்திய மொழிகள் மற்றும் மெய்யியல் ஒருமைப்பாடும் ஆதிசங்கரரின் பங்களிப்பும்” என்ற பொருண்மையிலான கருத்தரங்கம் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கில், கோயம்புத்தூர் சின்மயா பள்ளிகள் மற்றும் சின்மயா மிஷனின் ஆன்மிக வழிகாட்டி பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வி.மு. உமாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும் கருத்தாங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சு. சதீஷ்குமார்  வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி  காணொலி வாயிலாயத் தலைமையுரையாற்றினார்.

விழாவின் நிறைவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும் கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளருமான திருமதி பி. பத்மினி  நன்றியுரையாற்றினார்.

கருத்தரங்கத்தின் முதல் அமர்வில்  பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா மொழியின் இன்றியமையாமை குறித்தும் இந்திய மொழிகளின் சிறப்பு குறித்தும் எடுத்துரைத்தார். 

படிக்க வேண்டும்

spot_img